\
''இது மட்டும் புகை இல்லையா ?'' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்

''இது மட்டும் புகை இல்லையா ?'' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்

''இது மட்டும் புகை இல்லையா ?'' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்
Published on

நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்

தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் தன்னுடைய 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் பிரியங்கா சோப்ரா கொண்டாடினார். அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. அதில் பிரியங்கா சோப்ரா புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படமும் இருந்தது. அதனை குறிப்பிட்டு ஷேர் செய்த இணையவாசிகள் பிரியங்கா சோப்ராவின் பழைய ட்வீட்டை தோண்டி எடுத்து கிண்டலடித்து வருகின்றனர்.

கடந்த தீபாவளி தினத்தன்று ட்வீட் செய்து வீடியோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, தான் ஒரு ஆஸ்துமா நோயாளி. என்னைப்போல பலரும் உள்ளனர். அதனால் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தற்போது அதனை குறிப்பிட்டு கருத்து பதிவிடும் இணையவாசிகள் புகைப்பிடிப்பது மட்டும் ஆஸ்துமாவுக்கு சரியான ஒன்றா என கேள்வி எழுப்பி வருகின்றனர். #PriyankaChopra என்ற ஹேஸ்டேக்கையும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com