சசிகலா சமையலறை விவகாரம்: டிஜிபிக்கு ஆதரவாக கைதிகள் போராட்டம்!
கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ஆதரவாக கைதிகள் மவுன போராட்டம் நடத்தியது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் தனது ஆய்வு அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு அனுப்பினார். அதில், சசிகலாவுக்கு தனி சமையல் அறை உட்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக டி.ஜி.பி சத்தியநாராயணரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவதாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதை டி.ஜி.பி மறுத்திருந்தார்.
இந்நிலையில் டி.ஜி.பி சத்திய நாராயணாவுக்கு ஆதரவாக, பெலகாவி இண்டல்கா சிறையில் 100-க்கும் அதிகமான கைதிகள் சிறையில் நேற்று மவுன போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல், பரப்பன அக்ரஹாரா சிறையிலும் அவருக்கு ஆதரவாக கைதிகள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.