2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..!

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..!
2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..!

இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கள்ளநோட்டுகள் புழக்கத்தை தடுக்க உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபகாலமாக 2 ஆயிரம் ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்திருப்பதற்கான காரணம் குறித்து ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதற்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்த நிதியாண்டில் சுமார் 354 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடுவது படிப்படியாக குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி ‌எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் தாள் மட்டுமே அச்சிட்டதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய்‌ தாள் கூட அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. உயர்மதிப்பு ரூபாய் தாள்களை திடீரென செல்லாது என அறிவிக்காமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com