"நேரு பெயரைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்?"- பிரதமர் மோடி ஆவேசம்

"நேரு பெயரைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்?"- பிரதமர் மோடி ஆவேசம்
"நேரு பெயரைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்?"- பிரதமர் மோடி ஆவேசம்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அமளிக்கு இடையே பிரதமர் பேசினார்.

மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உறுப்பினர்களின் எடுத்து கூறியும் அமளியை கைவிட மறுத்தனர். இதையடுத்து உறுப்பினர்கள் அமளிக்கு இடையே பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி பேசினார்.



அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்தும், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டது குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அமளிக்கு இடையே பேசிய பிரதமர் மோடி, ''அவையில் சில உறுப்பினர்களின் நடத்தையும், அவர்களின் பேச்சு தொனியும் ஒட்டுமொத்த தேசத்திற்கே ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் அந்த நபர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும். எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இரைத்து தாமரையை வளரச் செய்வதால் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

நாங்கள் மாநில அரசுகளை தொந்தரவு செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை காங்கிரஸ்தான் 90 முறை கலைத்துள்ளனர். ஒரு காங்கிரஸ் பிரதமர், 356 சட்டப் பிரிவை 50 முறை பயன்படுத்தி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்திரா காந்திதான்.

காந்தி, நேரு குடும்ப பெயரில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால், அவர் வழி வந்தவர்கள் அவரின் பெயரை பின்னால் சேர்த்துக்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்? ஜவஹர்லால் நேரு சிறந்த மனிதர். அப்படியிருக்க நேரு என்ற பெயரைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன அவமானம் நேர்ந்துவிடும்?” என்று சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார் நேரு. தொடர்ந்து பிரதமர் மோடி தனது நீண்ட உரையில் பல்வேறு விஷயங்களையும் சுட்டிக் காட்டிப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com