பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ன் சரத்துக்கள் நீக்கப்பட்டது குறித்து பிரதமர் அந்த உரையில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இணைந்தே இதற்கான முக்கிய முடிவுகளை எடுத்தனர். அமித்ஷா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெளிவாக தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்து கூறிவிட்டார். பிரதமர் மோடி நேற்றே பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் திடீர் மறைவால் அது தள்ளிப் போனதாக தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தில் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என்ற பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.