பிரதமர் மோடி உரையுடன் டெல்லியில் தொடங்குகிறது பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாடு!

பிரதமர் மோடி உரையுடன் டெல்லியில் தொடங்குகிறது பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாடு!
பிரதமர் மோடி உரையுடன் டெல்லியில் தொடங்குகிறது பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாடு!

டெல்லியில் நாளை தொடங்கும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது குறித்த 3-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையை ஆற்றுகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பாரிசிலும், 2019-ம் ஆண்டு மெல்போர்னிலும் நடைபெற்ற இரண்டு மாநாடுகளிலும், ‘சர்வதேச நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவிக்கு’ எதிரான விவாதங்களை முன்னெடுத்த நிலையில், 3-வது மாநாடானது ‘பயங்கரவாதத்திற்கு பணம் கிடையாது’ எனற தலைப்பில் டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி, பயங்கரவாதத்திற்கான முறையான மற்றும் முறைசாரா நிதிகளின் பயன்பாடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள தேவையான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் உலகளாவிய போக்குகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இம்மாநாட்டில் 75 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பயங்கரவாத நிதியுதவியின் அனைத்து அம்சங்களின் தொழில்நுட்ப, சட்ட, ஒழுங்குமுறை மற்றும் ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றிய விவாதங்களை உள்ளடக்குவதற்கும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் மற்ற உயர்மட்ட உத்தியோகப்பூர்வ மற்றும் அரசியல் விவாதங்களுக்கான வேகத்தை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா பல்வேறு வகையான பயங்கரவாதத்தை சந்தித்துள்ளது. எனவே இதேபோன்ற பாதிப்புக்குள்ளான நாடுகளின் வலியையும், அதிர்ச்சியையும் இந்தியா புரிந்துகொள்கிறது. அமைதியை விரும்பும் நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்கொள்வதில் நீடித்த ஒத்துழைப்புக்கான பாலத்தை உருவாக்க விரும்புவதாகவும், இதற்காக அக்டோபரில் இன்டர்போலின் வருடாந்திர பொதுச் சபை மற்றும் ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழு மாநாட்டு என்ற இரண்டு உலகளாவிய நிகழ்வுகளை நடத்தியது எனவும், தற்போது நடைபெறவுள்ள இந்த மாநாடு, நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கான நமது முயற்சிகளை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com