மாலை 4 மணிக்கு வானொலியில் பேசுகிறார் பிரதமர் மோடி?

மாலை 4 மணிக்கு வானொலியில் பேசுகிறார் பிரதமர் மோடி?

மாலை 4 மணிக்கு வானொலியில் பேசுகிறார் பிரதமர் மோடி?
Published on

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ன் சரத்துக்கள் நீக்கப்பட்டது குறித்து பிரதமர் அந்த உரையில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இணைந்தே இதற்கான முக்கிய முடிவுகளை எடுத்தனர். அமித்ஷா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெளிவாக தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்து கூறிவிட்டார். பிரதமர் மோடி நேற்றே பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் திடீர் மறைவால் அது தள்ளிப் போனதாக தெரிகிறது.

இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு பேசுவதாக தெரிவித்த ட்வீட்டர் பதிவை அகில இந்திய வானொலி திடீரென்று நீக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com