மியான்மர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

மியான்மர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

மியான்மர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
Published on

மியான்மரில் ரோஹிங்யா இனத்தவருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்ய இருக்கிறார்.

வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவி‌ல் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் நரேந்திர மோடி, அங்கிருந்து மியான்மருக்குச் செல்ல இருக்கிறார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு மியான்மருக்கு மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும்.

2014 ஆம் ஆண்டு ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு மோடி சென்றிருந்தார். கடந்த 6 ஆம் தேதி மியான்மர் நாட்டின் தலைநகர் யங்கோனில் நடக்கிற ‘சம்வத் - மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு உலகளாவிய முனைப்பு’ மாநாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ பேச்சு ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com