ஆறாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.
நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை செங்கோட்டை வந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் காலை 7.30 மணிக்கு மூவண்ணக்கொடி கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். பிரதமராக நரேந்திர மோடி செங்கோட்டையில் 6 முறையாக கொடியேற்றியுள்ளார். இதற்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய் மட்டுமேச் செங்கோட்டையில் 6 முறை கொடியேற்றியுள்ளார்.
சுதந்திர தினவிழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.