ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி

ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், புபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் ஆகியோரும் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com