பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலுக்கு இன்று செல்கிறார்.
பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் உள்ள, குரஸ் செக்டாரில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் நேற்று தீபாவளி கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். இந்நிலையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு இன்று செல்கிறார். குளிர்காலம் வருவதை முன்னிட்டு, கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவாயில் நாளையுடன் மூடப்பட இருக்கிறது. இதையடுத்து பிரதமர் இன்று அங்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி, அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் பிரதமர் அங்கு செல்வது இது இரண்டாவது முறை.