தசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி

தசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி
தசரா விழாவில் ராவணன் சிலை மீது அம்பு விட்ட பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற தசாரா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவணன் சிலை மீது அம்பு விட்டார்.

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா விழா முடிவும் தருவாயிலை நெருங்கி உள்ளது. இதனையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். புகழ் பெற்ற ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ராமாயணத்தில் நிகழ்ந்தி இறுதிப் போர்க்காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதையடுத்து இறுதியாக ராவனன் வதம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்ட உருவத்தில் ராவணன் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பேசிய மோடி, பெண்களிடம் கண்ணியத்துடனும் அவர்களுக்கு அதிகாரமளித்து இணைந்து செயல்பட வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார். மேலும் உணவு, தண்ணீர் போன்ற அத்யாவஸ்யப் பொருட்களை வீணாக்க கூடாது எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com