\
சொந்த ஊரில் மோடி: மக்கள் உற்சாக வரவேற்பு

சொந்த ஊரில் மோடி: மக்கள் உற்சாக வரவேற்பு

சொந்த ஊரில் மோடி: மக்கள் உற்சாக வரவேற்பு
Published on

குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி இன்று காலை அவரது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

குஜாராத்தின் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அங்கு ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள மோடி, நேற்று, துவாரகாவில், ஓகா மற்றும் பெயிட் துவாரகாவை இணைக்கும் வகையில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

இன்று காலை, தன் சொந்த ஊரான வாத்நகருக்கு அவர் வந்தார். பிரதமரான பின்பு முதல் முறையாக வருவதால் ரயில்நிலையம் உள்பட அனைத்துப் பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலையில் இருபுறமும் கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு கைகாட்டிய படியே மோடி வந்தார். 

அங்கு ரூ.500 கோடி பெறுமான சிவில் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com