\
தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை
Published on: 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயாடு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com