'எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சிஏஏ செயல்படுத்தப்படும்' - மோடி உரை

'எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சிஏஏ செயல்படுத்தப்படும்' - மோடி உரை
'எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சிஏஏ செயல்படுத்தப்படும்' - மோடி உரை

எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது உறுதி என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் முடிவுகள் அனைத்தும் நாட்டு நலன் கருதியே எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். எனவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதாகட்டும் அல்லது குடியுரிமைத் திருத்தச் சட்டமாகட்டும், எதுவாக இருந்தாலும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் செயல்படுத்தப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தனது பணிகளை விரைவாக மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கூறினார்.

முன்னதாக வாரணாசியில் 1,254 கோடி ரூபாய் செலவிலான 50 திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு, அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு மையத்தையும் அவரது 63 அடி உயர சிலையையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இது தவிர 430 படுக்கைகள் கொண்ட அதிநவீன அரசு மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com