நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பங்கள் வேண்டாம்: பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை. ஜனநாயக முறைப்படி விவாதங்களை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்; ஆனால் கூச்சல், குழப்பங்கள் வேண்டாம் என மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக நேற்றிரவு அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், கூட்டத்தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.