குஜராத்தில் டவ்-தே புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் மோடி!

குஜராத்தில் டவ்-தே புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் மோடி!
குஜராத்தில் டவ்-தே புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் மோடி!

அரபிக்கடலில் அதிதீவிர புயலாக கரையை கடந்த டவ்-தே புயலால் குஜராத் பகுதியில் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. புயல் காற்று மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூறாவளியால் 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டவ்-தே புயல் நிவாரணப் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் இடைக்கால நிதியுதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் நிதியுதவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

40 ஆயிரம் மரங்கள், 70 ஆயிரம் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் சுமார் 6 ஆயிரம் கிராமங்கள் இருளில் மூழ்கியிருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com