\
பிரதமர் மோடி
பிரதமர் மோடிpti

அமைச்சர்களின் செயல்பாடுகளை பிரதமர் மோடி ஆய்வு.. 2 நாள் ஆலோசனைக் கூட்டம்!

அமைச்சர்களுடனான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம் 2 நாட்களாக நடக்கவிருக்கிறது.
Published on
Summary

மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட சர்வதேச சவால்கள், உள்நாட்டு பொருளாதார அழுத்தங்கள், சமையல் எண்ணெய் விலை உயர்வு போன்ற சூழலில், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான இரு நாள் ‘சிந்தன் சிவிர்’ ஆலோசனைக் கூட்டம் ஆய்வு செய்கிறது.

மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று மற்றும் நாளை பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீர்த்’தில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

மோடி
மோடிPt web

‘சிந்தன் சிவிர்’ என அழைக்கப்படும் இந்தக் கூட்டத்தில் அரசுத் திட்டங்களின் முன்னேற்றம், கொள்கை அமலாக்கம், அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவை விநியோகம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாடுகள், எட்டப்பட்ட இலக்குகள் மற்றும் அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி
மீண்டும் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை? தீபாவளி நெருங்கும் நிலையில் 7%-8% விலை உயர்வு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com