இந்தியா
"இந்தியர்களின் பாதுகாப்பே முக்கியம்" - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி
"இந்தியர்களின் பாதுகாப்பே முக்கியம்" - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி
உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை தாயகத்திற்கு அழைத்துவர போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.