பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
Published on

மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்டத்திட்டங்களை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக - பாஜகவுடனும், திமுக - காங்கிரஸ்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்ததுடன், பிரதமரை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்டத் திட்டங்களையும் திறந்து வைக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com