
ஈரோடு மாவட்டம் பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அவர்களின் மனதின் குரல் 100வது முறை ஒளிக்க உள்ளது. இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் அனைத்து குக்கிராமங்களிலும், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு தமிழனின் உடம்பில் எந்த அளவு தமிழ்ப்பற்று இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு பிரதமர் மோடியிடம் தமிழ்ப்பற்று இருக்கிறது. பிரதமர் மோடி, குஜராத்தி தமிழன் இல்லை. தமிழ் குஜராத்தி என்றவரிடம், கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து கேட்டதற்கு ,கர்நாடக அரசியல் மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பயன்படுத்தியது முறையல்ல. தாய் மொழி தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பேனா சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கலைஞர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன். பெரிய மனிதனை பேனாவிற்குள் அடைக்கிறீர்கள். அப்படியென்றால் நோட்டை எங்கு வைப்பீர்கள் என விமர்சித்த அவர், கலைஞர் அதற்கும் மேலானவர் என புகழ்ந்தார். அண்ணாமலை திமுக தலைவர்கள் ஊழல் பட்டியல் வெளிட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நீதிமன்றம் ஒருவருக்கு மட்டும் சொந்தம் கிடையாது, நீதிமன்றத்திற்கு வேலை கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழக நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளிப்பதை விட முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது பாஜக குறைந்த பட்சம் 130 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.