’5 கோடி பெண்களுக்கு 1 ரூபாய் விலையில் சானிட்டரி பேட்கள்’ சுதந்திர தின உரையில் பிரதமர்

’5 கோடி பெண்களுக்கு 1 ரூபாய் விலையில் சானிட்டரி பேட்கள்’ சுதந்திர தின உரையில் பிரதமர்
’5 கோடி பெண்களுக்கு 1 ரூபாய் விலையில் சானிட்டரி பேட்கள்’ சுதந்திர தின உரையில் பிரதமர்

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

இதில் பெண்கள் முன்னேற்றத்தில் தனது அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பேசினார் பிரதமர் மோடி. 

"எனது தலைமையிலான அரசாங்கம் எப்போதுமே இந்தியாவின் ஏழை மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதனால் 6000 ஜன அவுஷாதி (மக்கள் மருந்தகம்) மையங்கள் மூலமாக சுமார் 5 கோடி பெண்களுக்கு ஒரு ரூபாய் விலையில் சானிட்டரி பேட்களை பெற்றுள்ளனர்.

பெண்களுக்குகான சரியான திருமண வயதை தீர்மானிப்பதற்காக ஒரு குழுவையும் பணியமர்த்தியுள்ளோம். விரைவில் அந்த குழுவின் அறிக்கையை பொறுத்து பெண்களின் திருமண வயது குறித்த முடிவு எடுக்கப்படும். பெண்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான சிக்கலை களையவும் இந்த குழு தீர்வு கொடுப்பதறகாக செயல்பட்டு வருகிறது. 

கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் பெண்கள் யுத்தம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். நாங்கள் முத்தலாக்கையும் ஒழித்துள்ளோம்" என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார். 

பிரதமர் பெண்கள் குறித்து பேசியதும், ஒரு ருபாய் சானிட்டரி பேட் குறித்தும் இப்போது நெட்டிசன்கள் பிரதமரின் உரையை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com