\
பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமருடன் சந்திப்பு: இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமருடன் சந்திப்பு: இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமருடன் சந்திப்பு: இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு
Published on
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பிரிட்டீஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பசுமை ஹைட்ரொஜென், புதுப்பிக்கத்தக்க எரிச்க்தி. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள். காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டை வெற்றி கரமாக நடத்தியதற்காக போரீஸ் ஜான்சனுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் இந்தியா வரும் திட்டத்தை இரண்டு முறை ஒத்தி வைத்தபிறகு இரண்டு தலைவர்களுக்கிடையில் நடைபெறும் முதல் சந்திப்பு இது. சந்திப்பின்போது இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com