PM-CARES நிதிக்கு தனது சொந்த பணத்திலிருந்து 2.25 லட்சத்தை கொடுத்த பிரதமர் மோடி 

PM-CARES நிதிக்கு தனது சொந்த பணத்திலிருந்து 2.25 லட்சத்தை கொடுத்த பிரதமர் மோடி 
PM-CARES நிதிக்கு தனது சொந்த பணத்திலிருந்து 2.25 லட்சத்தை கொடுத்த பிரதமர் மோடி 

PM-CARES கீழ் பெறப்பட்டுள்ள நிதி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதனை ஆரம்பித்த போது இந்திய பிரதமர் மோடி தனது சொந்த சேமிப்பு பணத்திலிருந்து 2.25 லட்ச ரூபாயை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர் பிரதமரின் அலுவலக அதிகாரி ஒருவர்.

‘பெண் குழந்தைகளின் கல்வி, கங்கை நதியை சுத்தம் செய்ய என பலவேறு பொது நலன் சார்ந்த விஷயங்களில் தன்னால் முடிந்த நிதியை கொடுத்து அதற்கு பங்களிக்கின்ற வழக்கத்தை பின்பற்றி வருபவர் பிரதமர்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆர்.டி.ஐ விண்ணப்பத்தின் மூலம் PM-CARES மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்த தகவல்களை கொடுக்குமாறு கேட்டதற்கு அது குறித்த தகவல்களை பிரதமரின் அலுவலகம் தர மறுத்தது.

PM-CARES நிதி குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com