பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
 

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. ஆகையால், நமது வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம்: 'இந்த விஷயம் இல்லாமல் இந்தியாவுடன் சுமூக உறவை பேண முடியாது' - பாக். பிரதமர் ஷெபாஸ் ஷரீப்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com