மோடி
மோடிஎக்ஸ் தளம்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்.. கைது செய்த போலீசார். விசாரணையில் வெளியான தகவல்!

பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்த பெண் ஒருவரை, மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
Published on

பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்த பெண் ஒருவரை, மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

மோடி
மோடிகோப்புப்படம்

மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மிரட்டல்விடுத்த 34 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை, மும்பை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்போலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண்ணுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் போலீசார் முழுமையான விசாரணையைத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மோடி
”10 நாளில் பதவி விலகணும்..” - யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்.. மும்பை போலீசார் தீவிர விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com