\
திருக்குறளை மேற்கோள் காட்டி முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திருக்குறளை மேற்கோள் காட்டி முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திருக்குறளை மேற்கோள் காட்டி முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் என்ற ஐயன் வள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி, கொரோனாவில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் இன்று வரை கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து, குடும்பத்தை மறந்து சுற்றத்தாரை துறந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கு ஈடு இணையேதுமில்லை என குறிப்பிட்டுள்ளார். மக்களை கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்டது, முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும், தியாகமும் தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேச மக்களுக்கு நூறு கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனையை நிகழ்த்தி இருக்கும் சூழலில், முன்களப் பணியாளர்களுக்கு இந்த தேசத்தின் சார்பில் தனது மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com