pm modi
pm modiweb

ஈரான் போரால் தாக்கம்.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

மேற்கு ஆசிய போர் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்..
Published on
Summary

மேற்கு ஆசியப் போரின் தாக்கம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மேற்கொள்ளும் உயர்மட்டக்கூட்டத்தின் போது போரின் தாக்கத்தால் எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். அதற்கு பதில் அந்த மாநிலங்களின் தலைமை செயலர்களுடன் மத்திய அரசின் தலைமைச் செயலர் சோமநாதன் ஆலோசனை நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

pm modi
ஈரான் போருக்கு மத்தியில்.. அசுரனை களமிறக்கிய இந்தியா.. அஞ்சும் உலக நாடுகள்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com