\
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்

மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்

மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
Published on

பிரிந்து வாழும் தனது மனைவியை சந்திக்க விடாமல் தடுத்த மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் நீரஜ் (27). இவர் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராகி (25) என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் ஆன நாள் முதலே இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் கைக்கலப்பாகவும் மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தனது கணவர் மீது ராகி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மனைவியை தன்னுடன் வருமாறு நீரஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து தொலைபேசியில் பேசிய நீரஜ் தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் அவரது தொலைபேசி அழைப்புகளை ராகி ஏற்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த நீரஜ் கத்தியுடன் டெல்லி ஷாஷி கார்டனில் அமைந்துள்ள தனது மாமனார் வீட்டிற்கு நேற்று மதியம் சென்றுள்ளார். அங்கிருந்த அவரது மாமனார் தனது மகளை சந்திக்க விடாமல் தடுத்துள்ளார். இருவருக்குமிடையே காரசார விவாதம் நடைப்பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நீரஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மாமனாரை சரமாரியாகக் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கபட்டது. தப்பிய ஓடிய நீரஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com