சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!

சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!

சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
Published on

ஆபாசமான புகைப்படங்கள், தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறை விதித்துள்ளது

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விதிமுறைகளை வெளியிட்டனர். அதன்படி, இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி.

யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடி, ஃபேஸ்புக் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, ட்விட்டர் 1.75 கோடி. ஆபாசமான புகைப்படங்கள், தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும். புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு தவறான தகவல்களை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்ற விஷயங்களை சமூக வலைதளங்கள் கட்டாயம் கண்டறிய வேண்டும். அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். அரசோ அல்லது நீதிமன்றமோ அதுகுறித்த தகவல்களை கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com