நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழக தலைமைச் செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு ஓட்டுசீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம்எல்ஏக்களுக்கு 'பிங்க்' நிறத்தில் வாக்குச் சீட்டும் தரப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டி, டெல்லியில் இருந்து ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட, அதிகாரிகள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். நாளை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அறையில், மறைவு அமைக்கப்பட்டுள்ள மேஜை மீது ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அங்கு வாக்குச்சீட்டு தரப்படும். வாக்குப்பதிவுக்கு பிறகு அது சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். விமானத்தில் தனி சீட்டில் வைக்கப்பட்டு, துப்பாக்கி எந்திய பாதுகாவலரின் காவலுடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு
செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனிடையே, தலைமைச் செயலக வளாகத்தில் எம்.பி.க்கள் செல்வராஜ், கணேசமூர்த்தி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக்கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி., எம்எல்ஏக்கள் அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்) அவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் - இன்று காலை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்., தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு ஆகியோர் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com