இந்தியா
பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர்: ஜீன் 23க்குள் அறிவிப்பு
பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர்: ஜீன் 23க்குள் அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் 23 ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு சிவசேனாவின் ஆதரவை அமித் ஷா கேட்டதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்தவரும் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சிவசேனா ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பாஜக சார்பாக போட்டியிடும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் வரும் 23 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.