அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்
அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்

இந்தியப் பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மற்றும் மகளுடன் இந்தியாவிற்கு நேற்று வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தின் அகமதாபத்திற்கு வந்த அவர், உலகின் மிகப்பெரிய மைதானமாக அமைக்கப்பட்ட மோதிரா மைதானத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதற்கிடையே இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் டெல்லியில் இருந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் அதிபர் ட்ரம்ப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com