கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று drass பகுதியில் உள்ள போர் நினைவிடத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் மாவட்டத்திற்கு செல்லும் குடியரசுத் தலைவரை, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்கவுள்ளனர். அண்மையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் நினைவிடத்திற்கு சென்று, கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தினார்.
தற்போது கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடவதற்காக முப்படைகளின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.