இந்தியா
டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
73-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
இதனைத்தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முப்படைத் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக கொடியேற்றுவதற்காக டெல்லி ராஜபாதையில் வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். நேதாஜி தொப்பி அணிந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார். போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.