\
தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்

தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்

தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்
Published on

நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக  எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் வரும் நவம்பர் 17-ஆம் தேதியோடு முடிவடைகிறது. தற்போது அயோத்தி வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அதன் தீர்ப்பை வழங்கிவிட்டு ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

(ரஞ்சன் கோகாய்)

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகின. நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக  எஸ்.ஏ.பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். அதன்படி  நவம்பர் 18-ஆம் தேதி எஸ்.ஏ.பாப்டே பதவியேற்க உள்ளதாகவும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com