மாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்

மாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்

மாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்
Published on

மாநிலங்களவைக்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாஜக எம்பியும் விவசாய சங்கத் தலைவருமான ராம் ஷகல், எழுத்தாளரும் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளருமான ராகேஷ் சின்ஹா, பிரபல நடனக் கலைஞர் சோனால் மான்சிங், கல் சிற்பி ரகுநாத் மொஹபத்ரா ஆகியோரை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். 

பிரதமர் மோடி மற்றும் அவரது அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனங்களை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். மாநிலங்களவை நியமன எம்பிக்கள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பெண் தொழிலதிபர் அனு ஆகா, முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், நடிகை ரேகா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com