இந்தியா
பசு பாதுகாப்பு கொலைகள்: குடியரசுத் தலைவர் கவலை!
பசு பாதுகாப்பு கொலைகள்: குடியரசுத் தலைவர் கவலை!
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் படுகொலைகள் நடைபெறுவது குறித்து கவலை தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கும்பல் மனப்பான்மை கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் போது சமுதாயத்தின் அடிப்படையை காக்க மக்கள் தயாராக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி, இந்த விஷயத்தில் யாரும் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என தெரிவித்தார். ஜனநாயக மான்புகளை பாதுகாக்க ஊடகங்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.