குடியரசுத் தலைவர் மாளிகையை இனி வாரத்தில் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இனி பொதுமக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களின் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையையும் வெளிநாட்டவர் தங்களின் பாஸ்போர்ட்டையும் காண்பித்து மாளிகையைப் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணமில்லை. டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.