வேளாண் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் !

வேளாண் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் !
வேளாண் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் !

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவை சட்டமானதால், அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா‌, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்க‌ளும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாக்களை ஏற்கக்கூடாது என்று ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதுபோன்ற சூழலில், மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதை அடுத்து அது சட்டமானது. இதுதொடர்பாக மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம், அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகள் தொடர்பான சட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டிருக்கிறார். இது தொடர்பாகவும் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி, காஷ்மீரி, டோக்ரி, உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் ஜம்மு காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும். அரசு நிர்வாகம் மற்‌றும் சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு ஆங்கில ‌மொழி தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என்று மத்திய அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com