ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ஜனாதிபதி

ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ஜனாதிபதி
ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ஜனாதிபதி

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டிற்கு அர்பணித்துள்ளார். 

2500 மீட்டர் நீளம் ஓடுதளம் கொண்ட விமான நிலையம் 350 கோடி ‌ரூபாய் செலவில், 2750 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுள்ளது. இந்த விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ 320, போயிங் 737 போன்ற சிறிய ரக விமானங்களை இயக்க முடியும். 
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60,000 பயணிகள் வந்து செல்வதால், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மகாரஷ்டிரா அரசு விமான நிலையத்தை அமைத்துள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஷீரடி விமான நிலையத்திற்கு வந்த ‌குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com