”நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலே முறைகேடுதான்” - குடியரசுத் தலைவர் முர்மு உரை - முழுவிபரம்

”நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலே முறைகேடுதான்” - குடியரசுத் தலைவர் முர்மு உரை - முழுவிபரம்

”நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலே முறைகேடுதான்” - குடியரசுத் தலைவர் முர்மு உரை - முழுவிபரம்
Published on

2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று உரையாற்றினார்.

திரெளபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். ஆனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்திருக்கின்றன. அதேபோல இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிக்காக ஸ்ரீநகருக்கு சென்றுள்ள காங்கிரஸார், பனிப்பொழிவால் டெல்லிக்கு திரும்ப முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான மல்லிகார்ஜுனே கார்கே உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இப்படி இருக்கையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசியதன் விவரம் பின்வருமாறு:

* தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். 2047ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

* இந்தியா தனது பிரச்னைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. ஆனால் மற்ற நாடுகளோ தத்தம் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள இந்தியாவின் உதவியை எதிர்ப்பார்க்கின்றன. நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

* ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. பெரிய கனவுகளை செயல்படுத்தும் நோக்கில் நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

* சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது. முறைகேடு என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஊழிலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

- என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com