தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

21 பீரங்கிக் குண்டுகள் முழங்க டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

76 ஆவது குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மௌன அஞ்சலி செலுத்தினார். சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார்.

பின் டெல்லி கடமைப் பாதையில் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com