"கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்" கேரள முதல்வர் பினராயி விஜயன் !

"கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்" கேரள முதல்வர் பினராயி விஜயன் !

"கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்" கேரள முதல்வர் பினராயி விஜயன் !
Published on

கேரள மாநிலத்தில் கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி தேயிலை எஸ்டேட்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொடர் குடியிருப்பு முழுவதும் மண் மூடியது. இதில் 80 க்கும் அதிகமானோர் மண்ணிற்குள் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாத பகுதி என்பதால் மீட்பு பணியில் சிரமமும் தொய்வும் ஏற்பட்டுள்ளது. பத்து பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மூணாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கனமழையை எதிர்காள்ள தயாராகுங்கள். 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை அதிகரித்துள்ளதால் நிலச்சரிவு, மண் சரிவு ஆகியவை ஏற்படும். உள்ளூர் அதிகாரிகள் தரும் உத்தரவுப்படி நடக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com