புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க விறுவிறு ஆயத்த பணிகள்...!

புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க விறுவிறு ஆயத்த பணிகள்...!
புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க விறுவிறு ஆயத்த பணிகள்...!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 8-ந்தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும், 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வகுப்புகள் தொடங்கும் எனவும் இதற்கு பள்ளிகளை தயார் செய்ய இன்று முதல் வரும் 7-ந்தேதிவரை பள்ளிகளை திறந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

 வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தியுள்ள புதுச்சேரி அரசு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளை திறக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com