'மண்ணின் வீரர்கள்' விவசாயிகள் - போராட்டத்திற்கு ஆதரவாக பிரீத்தி ஜிந்தா கருத்து

'மண்ணின் வீரர்கள்' விவசாயிகள் - போராட்டத்திற்கு ஆதரவாக பிரீத்தி ஜிந்தா கருத்து
'மண்ணின் வீரர்கள்' விவசாயிகள் - போராட்டத்திற்கு ஆதரவாக பிரீத்தி ஜிந்தா கருத்து

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை பிரீத்தி ஜிந்தா தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். விவசாயிகள் இம்மண்ணின் வீரர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் சில படங்களை பகிர்ந்துள்ளார். இதில் " எனது இதயம் தற்போது விவசாயிகளிடமும் மற்றும் இந்த தொற்றுநோய் காலத்திலும் குளிரில் போராடும் விவசாயிகளின் குடும்பத்தை நோக்கியும் செல்கிறது. அவர்கள் நம் நாட்டை வழிநடத்தி செல்லும் மண்ணின் வீரர்கள். விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் நேர்மறையான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன், அனைத்தும் தீர்க்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.

பிரீத்தி ஜிந்தா மட்டுமல்ல, தர்மேந்திரா, பிரியங்கா சோப்ரா, ரிச்சா சாதா, சோனு சூட், சோனம் கபூர், ரித்தீஷ் தேஷ்முக், ப்ரனிதி சோப்ரா போன்ற பிரபலங்களும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். நடிகர் பாடகர் தில்ஜித் டோசன்ஜ் டெல்லி எல்லைக்கு நேரில் சென்று விவசாயிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து, கதகதப்பான ஆடைகளை வாங்குவதற்காக அவர்களுக்கு ரூ .1 கோடியையும் வழங்கியுள்ளார்.

My heart goes out 2the farmers & their families protesting in the cold in this pandemic.They are the soldiers of the soil that keep our country going.I sincerely hope the talks between the farmers & govt yield positive results soon & all is resolved. #Farmerprotests #Rabrakha ? pic.twitter.com/b7eW8p8N3P
— Preity G Zinta (@realpreityzinta) December 6, 2020

பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  டெல்லி எல்லைகளில் 12 நாட்களாக போராடி வருகின்றனர். டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டுள்ள இவர்கள், நாளை நாடு தழுவிய பாரத் பந்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com