ஒடிசா மாநிலத்தின் லாஞ்சிகார் கிராம சாலையில் ஏற்பட்ட தடையால், 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர்.
சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால், கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதையடுத்து, மூங்கில் உதவியோடு தொட்டில் கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் 16 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்தனர். பின்னர் அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.