\
படகிலேயே பிரசவித்த பெண்: வெள்ளத்திலிருந்து மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை

படகிலேயே பிரசவித்த பெண்: வெள்ளத்திலிருந்து மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை

படகிலேயே பிரசவித்த பெண்: வெள்ளத்திலிருந்து மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை
Published on

பீகாரில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்பிணி பெண்ணிற்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் படகிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பீகார் மாநில வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் 23 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மதுபானி மாவட்டத்தில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு படகிலேயே மீட்பு படையினர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளனர். 
இதேபோல், 6 கர்ப்பிணி பெண்களை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டு அவர்களை பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்ததாக மீட்பு படை அதிகாரியான விஜய் சின்ஹா தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com