\
அண்ணாசி பழத்தில் வெடிமருந்து : மனித மிருங்களால் இறந்த கருவுற்ற யானை..!

அண்ணாசி பழத்தில் வெடிமருந்து : மனித மிருங்களால் இறந்த கருவுற்ற யானை..!

அண்ணாசி பழத்தில் வெடிமருந்து : மனித மிருங்களால் இறந்த கருவுற்ற யானை..!
Published on: 

பசிக்கு உணவு தேடி வந்த கருவுற்ற யானை அண்ணாசி பழத்தை சாப்பிட்டு அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததில் உயிரிழந்த சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய அந்த யானை, மனிதர்கள் கொடுத்த உணவுகளை உண்டுள்ளது. கருவுற்றிருந்த அந்த யானைக்கு, அண்ணாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதை யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்திருக்கிறது. இதனால் வாய் மற்றும் நாக்கில் பலத்தை காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.

ஆனாலும் எந்த மனிதரையும் தாக்காமல், எந்த வீட்டையும் சேதப்படுத்தாமல் அந்த யானை சென்றிருக்கிறது. பசி அதிகமாக இருந்ததால் எதையாவது உண்ணாலம் என யானை நினைத்த போதும், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர்.

சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இந்த தகவலை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சோகத்துடன் பகிர்ந்துள்ளார். யானையை கொன்றவர்களுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டும் என பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com