\
சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தொகாடியா மீட்பு: குஜராத்தில் பரபரப்பு

சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தொகாடியா மீட்பு: குஜராத்தில் பரபரப்பு

சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தொகாடியா மீட்பு: குஜராத்தில் பரபரப்பு
Published on

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகடியா காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று மாலை மீட்கப்பட்டார்.
 
சுயநினைவற்ற நிலையில் இருந்த அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்ததால் உடனடியாக  மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கு ஒன்றுக்காக தொகாடியாவை கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறையினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த நிலையில், அவர் வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார். இசட் பிரிவு பாதுகாவலில் உள்ள அவர், பாதுகாப்பு ‌வளையங்களை மீறி காணாமல் போனதாக தகவல் பரவியதை அடுத்து குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com